கிருஷ்ணரை பற்றிய ஞானத்தை உண்மையான மூலத்தில் இருந்து படிப்பவரின் வாழ்க்கை மிகுந்த பக்குவம் அடைகின்றது.
பகவத் கீதை என்பது கிருஷ்ணர் நமக்கு உபதேசித்த ஞானம். இதில் நம் வாழ்வு பக்குவம் அடையவும் ஆன்ம ஞானம் பெறவும் தேவையான அனைத்து விஷயங்களும் கிருஷ்ணரால் விளக்கப்பட்டுள்ளது. ஆன்ம ஞானம் , யோகங்கள், வாழ்வின் நோக்கம், வெற்றிக்கான வழி, பக்தி மார்க்கம் என அனைத்தும் அழகாக கிருஷ்ணர் விளக்குகிறார். பகவத் கீதை உண்மையுருவில் என்ற இந்த புத்தகம் லட்சக்கணக்கான கிருஷ்ண பக்தர்களை உலகம் முழுக்க உருவாக்கிய சக்திவாய்ந்த புத்தகம். இந்த புத்தகத்தை படிப்பவர் கிருஷ்ண பக்தி பெற்று கிருஷ்ணரின் அருள் பெறுவது உறுதி. 900 அதிக பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் 700 ஸ்லோகங்கள், வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் , தமிழ் அர்த்தம், ஆச்சாரியாரின் பொருளுரை , கிருஷ்ணரின் வண்ண படங்கள் உள்ளன.
இத்துடன் கிருஷ்ண கதைகளை விளக்கும் "கிருஷ்ணர், புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள்" என்ற புத்தகத்தை வாசிப்பது இன்னும் அதிக நம்மை பயக்கும். இந்த புத்தகமானது பாகவதத்தில் பத்தாவது காண்டத்தின் முழு சாராம்சத்தை நமக்கு தருகிறது . பாகவதத்தில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணரின் அனைத்து லீலைகளை ஆச்சாரியாரின் விளக்கத்துடன் கதை வடிவில் அழகாக விளக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை படிக்கும் போது கிருஷ்ணரின் பெருமைகளை உணர்ந்துகொள்வதால் கிருஷ்ண பக்தி வலுப்பெறுகிறது. 900 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்த புத்தகம் கிருஷ்ணரை பற்றிய ஞானத்தையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் தருவதோடு கிருஷ்ணரின் அருளும் நமக்கு தருகிறது.
இந்த இரண்டு புத்தகங்களின் கூட்டு விலை Rs 600 புத்தக விநியோக திருவிழாவை முன்னிட்டு தள்ளுபடி விலையில் Rs 500 க்கு (தபால் செலவு Rs 100 தனி ) தற்போது விற்கப்படுகிறது.
Cash on delivery / VPP மூலம் பணம்செலுத்தி பெற நினைப்பவர்கள் +91 9884937930 என்ற எண்ணிற்கு தங்களின் பெயர், முழு முகவரியை வாட்ஸாப்ப் / SMS செய்யவும். VPP / COD மூலமாக உங்களுக்கு புத்தகம் அனுப்பிவைக்கப்படும்.
Google Pay/Phone Pe மூலமும் பணம் செலுத்தி பெறலாம். தகவல்களுக்கு +919884937930 தொடர்பு கொள்ளவும்.
இதுபோன்ற ஆன்மீக புத்தகங்களை வாங்கும் நாம் செலவழிக்கும் பணத்தால் நம்மிடம் உள்ள செல்வம் தூய்மை அடைகிறது. இந்த பணமானது ஆன்மீக காரியங்களுக்கும், கிருஷ்ண பக்தி பிரச்சாரத்திற்கு உபயோகிக்கப்படுவதால் தங்கள் தரும் நன்கொடை கிருஷ்ணரை கண்டிப்பாக மகிழ்விக்கும். எனவே இந்த புத்தாண்டில் சுப செலவாக செய்து கிருஷ்ணரின் அருளை பெறுவோமாக.